திண்டுக்கல்லில் நலிவடைந்த 140 கூலித் தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் நிவாரண பொருட்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
சமூகத்தில் நலிவடைந்த மற்றும் 144 தடை உத்தரவால் வேலை வாய்ப்பு இழந்து வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் திண்டுக்கல் தோமையார்புரம் , ஆரோக்கிய மாதா தெரு , கோவிந்தாபுரம் , பூச்சி நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி , பருப்பு , காய்கறி , மளிகை சாமான்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் சலங்கை ஒலி நாட்டிய பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 140 கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் , மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் , நகர கூட்டுறவு தலைவர் பிரேம் ( எ) வீர மார்பன் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக புரவலர் திபூர்சியஸ் , திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க தலைவர் சிவா , செயலாளர் பாரதிமுருகன் , இணைச் செயலாளர் விஜயகுமார் , பொருளாளர் மூர்த்தி , 2020 - 2021 ஆண்டிற்கான தலைவர் குணா செயலாளர்கள் சேவியர் , இ.பி. முத்தையா , பகுதி செயலாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.