திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக கட்சி சார்பில் 12000 குடும்பங்களுக்கு 80 லட்சம் மதிப்பிலான மளிகை தொகுப்பினை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 12000 குடும்பங்களுக்கு 80 லட்சம் மதிப்பில் அதிமுக மாநகர மாவட்ட கழகம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை தொகுப்புகள் கொண்ட வாகனத்தை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாநகர மாவட்ட செயலாளர் திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் மற்றும் கழக தொண்டர்கள் உடனிருந்தனர். அமைச்சர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக முதல்வரிடம் தொழில்துறையினர் வைத்த கோரிக்கையை 5 போர் கொண்ட குழுவிடம் பரிசீலனை செய்த பின்பே ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது, அனைவரின் வாழ்வாதாரத்தையும் அரசு பாதுகாத்து வருகின்றது, பின்னலாடை நிறுவன பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வர ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவனங்கள் விண்ணப்பித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது, வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்தவர்கள் செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பேட்டி அளித்தார்.