தேனியில் 120 கிலோ கோதுமையை பறிமுதல் செய்த தாசில்தார்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அரசால் வழங்கப்பட்ட கோதுமையை பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி போடி தாசில்தார் மணிமாறன் மற்றும் அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்கள்.அப்போது போடி புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி காம்பவுண்ட் சுவற்று பகுதிக்குள் 3 சாக்கில் கோதுமை இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கோதுமை மூட்டைகளை பறிமுதல் செய்த தாசில்தார் போடி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் அந்த கோதுமை ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அரசால் வழங்கப்பட்ட கோதுமை என்பதும்,120 கிலோ எடையுள்ளதும் என தெரியவந்தது. மேலும் இந்த கோதுமை மூட்டைகளை பதுங்கியது யார் எந்த ரேஷன் கடையில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட செய்திகளுக்காக
க.சின்னதாஸ்.