கொடைக்கானலில்  12- வது வார்டு பொதுநலச்சங்கம் மற்றும் சன் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பட்டயத்தலைவர் டாக்டர். டி. பி. ரவீந்திரன் வழங்கினார்.


 


கொடைக்கானல்   சன் லயன்ஸ் சங்கம் மற்றும் 12-வது வார்டு பொது நலச்சங்கம் சார்பாக கொரோனா வைரஸ் அச்சத்தால் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 12-வது வார்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பைகளில் வைத்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சன் லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் டாக்டர். டி. பி. ரவீந்திரன் தலைமை வகித்தார். சன் லயன்ஸ் சங்கத்தலைவர் கிரன் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி ஆத்மநாதன் , முன்னாள் நகர சபை தலைவர் கோவிந்தன் , தாசில்தார் வில்சன் தேவதாஸ் , இன்ஸ்பெக்டர் ராஜசேகர் , முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஆசா ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். ஏனையோருக்கு வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சன் லயன்ஸ் சங்கம் மற்றும் 12-வது வார்டு பொதுநலச்சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் சுதாகர் , மகேந்திரன் , சன் லயன்ஸ் சங்க செயலாளர் அப்பாஸ் , பொருளாளர் ஜெரால்டுராஜா, உறுப்பினர்கள் சேது , சிக்கந்தர் , ராமலட்சுமி , அகிலா உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் . முடிவில் முன்னாள் தலைவர் அருண் ரவீந்திரன் நன்றி கூறினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image