திருப்பூர் மாநகராட்சியில் 1 ரூபாய்க்கு மாஸ்க் விநியோக இயந்திரம். பொருத்தப்பட்ட நாள் முதல் மாஸ்க் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம்.
திருப்பூர் மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் மேலும் அரசு பணிகள் தொடர்பாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் ஒரு ரூபாய்க்கு மூன்றடுக்கு முக கவசம் வினியோகிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. நேற்று மாலை பொருத்தப்பட்ட இந்த இயந்திரத்தில் முதல் கட்டமாக 50 முகக் கவசங்கள் வைக்கப்பட்டது இவை அடுத்த அரை மணி நேரத்தில் தீர்ந்து போன நிலையில் அடுத்தகட்டமாக முகக் கவசங்கள் வைக்க படாமலேயே பெயரளவில் இயந்திரம் மட்டும் உள்ளது இதனால் மாநகராட்சியில் முகக்கவசம் வாங்கலாம் என நினைத்து வந்த பொதுமக்கள் காலியாக உள்ள இயந்திரத்தை கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.