திருப்பூரில் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்



திருப்பூரில் கொரோனாவால் பாதிப்படைந்த 114 பேரில், 112 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நோய் தொற்று பரவலை ஊரடங்கு உத்தரவானது, அமல்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் பனியன் நிறுவனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை. இதனால்  பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து திருப்பூரிலிருந்து வந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சம்பந்தபட்ட பனியன் நிறுவனங்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அளித்து வந்தனர். இருப்பினும் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி, கடந்த சில நாட்களாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். மேலும் ரயில் மற்றும் பேருந்துகள் செல்கிறது என்கிற வதந்தி பரவிய காரணத்தால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகப்படியானோர் திரண்டனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகமர சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதற்கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலமாக இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோரை அவர்களின் சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி துவங்கியது. சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பத்தவர்களில் முதற்கட்டமாக பீகாரை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டர்வகளை ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பும் பணி திருப்பூரில் நடைபெறுகிறது. பதிவு செய்யப்பட்ட நபர்களை மாவட்ட நிர்வாகம் மூலம் பேருந்துகளில் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டு  ,  உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு , உணவு , தண்ணீர் பாட்டில்கள் போன்றவை கொடுக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் செல்கின்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image