கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தகவல்
கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஒரு நபர் பண்ருட்டியில் இரண்டு நபர் சிதம்பரத்தில் ஒரு நபர் என மொத்தம் 4 நபர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது(20.04.2020) பின்பு தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் மாவட்டத்தில் நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சிகள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அனைத்து பகுதிகளிலும் தொற்று பரவாமல் இருக்க வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபருக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவித்தார் இந்த ஆய்வின்போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் கீதா நகராட்சி ஆணையர் பிரபாகரன் வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் பல உடனிருந்தனர்