உணவு கேட்டு முகநூலில் பதிவிட்ட பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ அமைப்பு April 11, 2020 • M.SENTHIL திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டிலேயே இருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களுக்கு மளிகை உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் முகநூலில் பதிவிட்டது அடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தனியார் அமைப்பு (ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) சார்பில் ஏழை , எளிய மக்களுக்கு தினமும் 500 நபர்களுக்கு உணவு, குடிநீர், 5 கிலோ அரிசி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த உதவிகள் வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் நிர்வாக இயக்குநர் குளோபல் பூபதி வழங்கினார்.