நூறு ரூபாய்க்கு பத்து வகையான காய்கறி தொகுப்பினை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
திண்டிவனம் ஏப்ரல்-4
திண்டிவனம் நகராட்சியில் இன்று நூறு ரூபாய்க்கு பத்துவகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பினை போது மக்களுக்கு வழங்கி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார் மேலும் இந்த காய்கறி தொகுப்பினை ஊரடங்கை மீறி மக்கள் அதிகம் நடமாடுவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ்,டிஎஸ்பி கனகேஸ்வரி, பொறியாளர் பவுல் செல்வம் பணி ஆய்வாளர் ஆரோக்கியமகிமைநாதன், உதவி பொறியாளர் தேவநாதன், நகர அமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்