கடலூர் பேருந்து நிலையத்தில் கடலூர் பெரு நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமிநாசினி சுரங்க வழியினை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்
கடலூர் பேருந்து நிலையத்தில் கடலூர் பெரு நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமிநாசினி சுரங்க வழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் திறந்து திறந்துவைத்து பொதுமக்களுக்கு தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது கடலூர் பேருந்து நிலையத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் பெரு நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது சமூக இடைவெளியுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தது போல விழித்திரு - விலகி இரு-வீட்டில் இரு -அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தெய்வ பக்கிரி நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்