துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் வடக்கு போலீசார் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் அரிசி வழங்கி கௌரவித்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் செய்து வரும் பணியை கௌரவிக்கும் விதமாக உதவி ஆணையர் வெற்றிவேந்தன் தலைமையிலான திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீசார் 30 துப்புரவு பணியாளர்களுக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சால்வை அணிவித்து கௌரவித்தனர் மேலும் அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் முப்பது பேருக்கும் வழங்கினர் இந்த நிகழ்ச்சியின்போது சமூக இடைவெளி விட்டு அனைவரும் பங்கேற்று சமூக இடைவெளியை அவசியத்தையும் உணர்த்தினர்.