தூய்மை காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை வழங்கினார்
செங்கம்,ஏப் 21- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், பலாமருத்தூர், மேல்சிலம்படி, தென்மலைஅத்திப்பட்டு, கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் ஆகிய ஆறு ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் கேசவன் காலி ஊராட்சி மன்ற தலைவி சந்தியா கழக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். இவர்களுடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சக்திவேல் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் பங்கேற்று நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073