ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் 

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் 


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .


மதுரை மாவட்டம், கருப்பம் பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹிம் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார் , தனது கடையில் ஆடு,கோழிகளுக்கு உணவு வைக்க வந்துள்ளார் . அங்கு வந்த காவல் துறையினர் கடை வாசலில் நின்றிருந்த அப்துல் ரஹிம் மருமகனை கடுமையாக தாக்கியுள்ளனர். காவல் துறையின் இத்தகை செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . மேலும் இதனை தடுக்க வந்த அப்துல் ரஹிம் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது  .


அப்துல் ரஹிம் அவர்களை இழந்து வாடும் அவரது  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். 


கொரோனா வைரஸ் தொற்று வை கட்டு படுத்த காவல் துறையினர்கள் மக்கள் நலன் கருதி மிக  சிறப்பாக  பணியாற்றி வருவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்  . மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தொடர் ஊரடங்கும் உத்தரவால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பொருளாதாரம் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்க படும் சூழலில் உள்ளார்கள் ? இந்த நிலையில் மக்கள் மீது காட்டு மிராண்டி தனமாக காவல் துறையினர் நடந்து கொள்வது கண்டிக்கதக்கதாகும் . 


கொரோனா வை முற்றிலும் ஓழிக்க அணைத்து  மக்களும் முழு ஓத்துழைப்பு வழங்கி வரும் தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதுனால் தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது . மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.


எனவே  : இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் , காட்டு மிரான்டி தனமாக நடந்து கொண்ட  காவல் துறையினர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் மேலும் உயிரிழந்துள்ள அப்துல் ரஹிம் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image