அகில இந்திய பொதுச்செயலாளர்
க.ஆ.சாம்பசிவம்
அவர்கள் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர்
மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி.பழனிச்சாமி
தமிழ் நாடு துணை முதல்வர்
மதிப்பிற்குரிய
திரு.O.பன்னீர்செல்வம்
அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள் என்னவென்றால் அரசு அறிவித்த 1000 ரூபாய் மக்களுக்கு பற்றாக்குறைகளை தீர்க்குமா என்றால்?
இல்லை
மக்களுக்கு பற்றாக்குறையாக தான் உள்ளன எனவே தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி 10000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் அரிசி பருப்பு சர்க்கரை சமையல் எண்ணெய் அனைத்தும் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்ற ஊடகங்கள் மூலமாக தெரிகிறது அவரவர்களின் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் நகராட்சி நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மூலமாக வீட்டிற்கே சேரும்படி செய்தால் அவர்கள் ஏன் வெளியில் திரிவார்கள் அதையும் மீறி வெளியில் வந்தாள் கடுமையான நடவடிக்கை 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் படி அரசு நடவடிக்கை எடுக்கலாம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் ஒன்று கூடுகிறார்கள் இதனால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது அரசு இதில் முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இது மக்களுக்கான அரசு மக்களை காக்கவே இந்த அரசு அதனால் மக்கள் பணியை மகேசன் பணியாக நினைத்து இந்த கொடிய கொரேனா விலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்
என்றும் மக்கள் பணியில்
க ஆ சாம்பசிவம்
அகில இந்திய பொதுச்செயலாளர்
அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள் கழகம்