சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்ட் ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம்கண்காணிப்பு.
தேவகோட்டை , ஏப்.23- கொரோனாவைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுவதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் அதையும் மீறி சிலர் நடமாடி வருபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள் இந்நிலையில் தேவகோட்டை மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க சிவகங்கை எஸ்.பி. உத்தரவுபடிதேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் தலைமையில் 2 ட்ரோன்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் போது நகர காவல் ஆய்வாளர் பேபி உமா, காவல் துணை ஆய்வாளர்கள் மருது, மீனாட்சி சுந்தரம், ராஜ்கமல், திருமுருகன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்