வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கும் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியில் வசித்து வரும் ஐம்பதிற்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கும் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலரும் வெங்கனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான சுவாமி முத்தழகன் தலைமையில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் ஒன்றிய துணைச் செயலாளர்கள் கந்தசாமி மற்றும் வீரராஜன் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கந்தசாமி விக்டர்மனோகர்ராஜ் ஆகியோர் முன்னிலையில் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் மற்றும் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி ஆகியோர் கோதுமை அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார் மேலும் 200க்கும் மேற்பட்டோருக்கு கூட்டமைப்பின் சார்பில் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர் இதில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு ஒன்றிய துணைத் தலைவர் அம்பேத்கர்முன்னாள் வட்டத் தலைவர் அர்ஜுனன் கிராம நிர்வாக அலுவலர் ராஜீ ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பிரேம் குமார் முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்