திருப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் போதிய வசதிகளின்றி இருட்டில் அமர்ந்திருக்கும் அவலம்.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் வீடின்றி சாலையில் குடியிருக்கும் மக்களை 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் கண்டறிந்து அவர்களை பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பாதுகாப்பாகவும் பொதுமக்கள் வெளியே செல்லாதவாறு காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கல்லூரி சாலை சிக்கண்ணா கல்லூரி அருகே அமைந்துள்ள பள்ளியில் வீடில்லாத மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் போதிய வசதிகள் இல்லாமலும் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருளில் அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பைத் தரும் காவலர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது