திருப்பூரில் கொரோனா வேடமிட்டவருடன் ஊர்வலமாக வந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு போலீஸ் சார் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹெல்மெட்டில் கொரோனா போல வேடம் அணிந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் போலீசார் கொரானா விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெருமாநல்லூர் ரோடு பகுதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறினர்.