மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் வந்து சாலை மற்றும் வீதிகள் தோறும் ஆய்வு செய்தார்
செங்கம்,ஏப்ரல் 12 : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைகளையும் மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் வந்து சாலை மற்றும் வீதிகள் தோறும் ஆய்வு செய்தார். இதில் சாலை மற்றும் வீதிகளில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரியும் நபர்களிடம் விசாரித்து அவர்களுக்கு கொடிய நோயான கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் புதிய பேருந்து நிலையத்தில்பொதுமக்களின் நலன் கருதி தற்காலிகமாக அமைத்த உழவர் சந்தையை ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073