அதிமுக கிளை செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் அரிசி, காய்கறிகள், மளிகை தொகுப்புகள் போன்ற இலவச நிவாரணங்களை வழங்கினார்.
செங்கம், ஏப்ரல் 24-திருவண்ணாமலைமாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்களின் நலன் கருதி கொரோனா நிவாரணமாக ஏழை எளிய குடும்பங்களை தேர்வு செய்து அதிமுக கிளை செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் அரிசி, காய்கறிகள், மளிகை தொகுப்புகள் போன்ற இலவச நிவாரணங்களை வழங்கினார். மேலும் இவருடன் துணை தலைவர் ஜோதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வைத்தியநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பண்ணீர், குபேந்திரன், திருமலை, தருமன் என பலர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் விதிமுறைக்கு உட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி வீடுகள் தோறும் நேரில் சென்று இலவச தொகுப்புகளை வழங்கினார்கள். இதில் தோட்டக்கலை உதவி அலுவலர்.சரவணன், கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி, ஊராட்சி செயலாளர் செந்தில் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073