பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தகவல்

பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன்
தகவல்


கடலூர் டவுன்ஹால், சாவடி, திருப்பாதிரிபுலியூர், பேருந்து நிலையம் ஆகிய
பகுதிகளில் உள்ள சோதனை  சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
.ஸ்ரீஅபிநவ்.முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்.அன்புச்செல்வன்,  இன்று (28.04.2020) நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .அன்புச்செல்வன்
அவர்கள் தெரிவித்ததாவது.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு
நகராட்சிகள் மூலம் அனுமதி சீட்டு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொதுமக்கள் அனுமதி சீட்டுடன் வெளியே செல்கிறார்களா என
இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்கப்பட்டு
வருகிறது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து சமூக
இடைவெளியை பின்பற்றிட வேண்டும்.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை
தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முக கவசம் இல்லாமல் வெளியே
வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துறை,
காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மாவட்டத்தில்
சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற முழு ஊரடங்கிற்கு கடலூர் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பை
அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் திரு.ராமமூர்த்தி மற்றும் பலர்
உடனிருந்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image