தேவகோட்டையில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கள்.
தேவகோட்டை , ஏப்.30- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரங்கு அமலில் இருப்பதால் வருமையில் இருக்கும் ஏழை எளிய மக்கள் 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை தமிழன் சட்ட உரிமைகள் கழகம் அமைப்பின் தலைவர் கேபிள.பஷீர் முஹம்மது , பொருளாளர் வி எஸ். சூசை ஆகியோரின் தலைமையிலும் தேவகோட்டை வட்டாச்சியர் முன்னிலையிலும் வழங்கப் பட்டது.இன் நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.சுதாகர், மாநில நிர்வகச்செயலாளர் கே.பி.சுல்தான், தேவகோட்டை நகர ஒருங்கிணைப்பாளர் ஏ.செய்யது அபுதாகிர் மற்றும் உறுப்பினர்கள் ஏ.நிஸ்வர்தீன் , ஆகாஷ், ரஹ்மான், அப்பாஸ், மாணிக்கம், குமார்ஆகியோர்கள் கலந்து கொண்டனர்