ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய வாகனங்களை நிற்க வைத்து எச்சரித்து அனுப்பிய திருப்பூர் போலீசார். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் நகர் பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து வெளியே சுற்றித் திரிவதை தடுக்கும் விதமாக திருப்பூர் வடக்கு காவல் துணை ஆணையர் வெற்றி வேந்தன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன், துணை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் இன்று அநாவசியமாக வெளியே வந்த அனைத்து வாகன ஓட்டிகளையும் அரை மணி நேரம் நிற்கவைத்து பின்னர் அனுப்பினர் மேலும் அவர்களிடம் நாளை முதல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருவோர் மீது வழக்கு தொடரப்பட்டது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.