திண்டிவனத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவினர் காய்கறி மற்றும் மளிகை தொகுப்பினை வழங்கினர்
திண்டிவனம் ஏப்ரல் 13
திண்டிவனம் ஹவுஸ்சிங்போர்டு பகுதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கினங்க மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனையின்
படி மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன்,மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில் மானுர் ஊராட்சியை சேர்ந்த 20 தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அதிமுகவினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபரும் மேலவை பிரதிநிதியுமான தீபம்குமார்,வட ஆலப்பாக்கம் கூட்டுறவு சங்க தலைவர் சலவாதி ஜெயகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய கழக செயலாளரும் குன்னம்ப்பாக்கம் கூட்டுறவு சங்க தலைவருமான செல்வராஜ் ஆகியோர் தலைமை தங்கினார்.
எம்ஜிஆர் ஒன்றிய செயலாளர் கோவடி தனுசு,மரக்காணம் ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், எண்டியூர் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் ஜக்காம்பெட்டை கூட்டுறவு சங்க தலைவர் ராஜி,ராஜா (எ) சக்கரவர்த்தி தென்களவாய் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மொளசூர் வெள்ளிக்கண்ணு, கோபாலகிருஷ்ணன், எண்டூர் கட்டு குமார், ராஜாராமன்,மானூர் சங்கர்,ஏழுமலை,
ராஜேஷ் ,பார்த்திபன், தென்நெற்குணம் கோவிந்தராஜ், பிரம்மதேசம் எத்திராஜ், மொளசூர் சேதுராமன், மானுர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்