கலசப்பாக்கம் தொகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கை பணிகளில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை ஆங்காங்கே பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் சில சமூக விரோதிகள் மருத்துவர்களின் பணிகளை இழிவுபடுத்தி வருவதால் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நாளுக்கு நாள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த நிலையில் கலசபாக்கம் அரசு மருத்துவமனை, வட்டார மருத்துவமனை ,ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் 45 ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம செவிலியர்கள் தனது தொகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து 24 மணி நேரமும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் குறித்த அச்சமின்றி பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் நலன் கருதி அவர்களின் பணிகளை பாராட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் சால்வை, கேடயம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்து பாராட்டினார். இவருடன் கழக நிர்வாகிகள் பொய்யாமொழி மண்ணு ஆறுமுகம் பலர் பங்கேற்றனர்.
மேலும் இதில் கலசபாக்கம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொறுப்பு ஜீவராணி, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, மருத்துவ மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவர்கள் மீது இரக்கம் கொண்டு இரு கரம் கூப்பி வணங்கி அவர்களை மனதார பாராட்டினார். இதனைத் தொடர்ந்து பாராட்டு மற்றும் ஆலோசனைகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு மருத்துவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073