திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா , அம்பாத்துரை ஊராட்சியில் அமிர்தா கல்வி நிறுவனங்கள் , செட்டியபட்டி ஊராட்சி மற்றும் சுகாதார துறை ஆகியவை இணைந்து கபசூர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது . இந்நிகழ்ச்சி அமிர்தா கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரி தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் விஜய்ஆனந்த் , அம்பாத்துரை ஊராட்சி மன்ற தலைவர் எம். சேகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கபசூர குடிநீர் குடித்து பயன்பெற்றனர்.
ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை ஊராட்சியில் அமிர்தா கல்வி நிறுவனத்தின் சார்பில் கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.