தேனி மாவட்டம் அகமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நலத்திட்டங்கள் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி வழங்கினார்

அகமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நலத்திட்டங்கள்
ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி வழங்கினார்


 தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட அகமலை உள்ளிட்ட மலை கிராம மக்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் நலத்திட்டங்களை வழங்கினார்.
    கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட  அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை பட்டூர், மருதையனூர், அண்ணாநகர், பணங்கொடை உள்ளிட்ட மலை பகுதிகளில் 76 பழங்குடியினர் குடும்பங்கள் உள்ளிட்ட 462 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஊரடங்கால் வேலையின்றியும், வருமானமின்றியும் தவித்து வந்த மலைவாழ் மக்கள் குறித்து தகவலறிந்த கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீhசெல்வம் மலை பகுதியில் வாழும் 462 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டதின் பேரில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் நேற்று இப்பகுதிகளுக்கு நேரில் சென்று மலை வாழ் மக்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்ட மலை வாழ் மக்கள் துணை முதல்வருக்கும், தேனி பாராளுமன்ற உறுப்பினருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.   இந்நிகழ்ச்சியில்  போடி ஒன்றிய செயலாளர் சற்குணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image