திருப்பத்தூர் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர்
நடமாடும் ஏடிஎம் இயந்திரம்
மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்


திருப்பத்தூர் ஏப்30
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பத்தூர் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிவித்தார் இதனையொட்டி வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது இதனையொட்டி  பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி வேலூர் மண்டல மேலாளர் சேதுமுருகதுரை தலைமை வகித்தார் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ரிப்பன் வெட்டியும் கொடியசைத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்தும் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் முதன்மை மேலாளர் செல்வராஜ் மண்டல அலுவலகம் முதன்மை மேலாளர் செல்வக்குமார் வங்கி சேவை மேலாளர் பாலமுரளி துணை மேலாளர் உட்பட அனைத்து வங்கி கிளை மேலாளர் கலந்துகொண்டனர் இந்த ஏடிஎம் எந்திரம் மூலம் பணத்தை எடுக்கவும் பணத்தை போடவும் வங்கி கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதையும் பணத்தை அடுத்தவர் கணக்கிற்கு மாற்றவும் முடியும் நடமாடும் ஏடிஎம் எந்திரம் திருப்பத்தூர் நகரம் மற்றும் தாலுகா முழுவதும் தினமும் சென்றுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் 
படத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் சிவனருள் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம் அருகில் பாரத ஸ்டேட் வங்கிவேலூர் மண்டல மேலாளர் சேது முருகதுரை மற்றும் பலர் உள்ளனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image