திருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி – தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு முகாமில் சேர்த்த மாவட்ட கலெக்டர் : பொதுமக்கள் பாராட்டு
தி.மலை, ஏப்ரல்.15- திருவண்ணாமலையில் ஆதரவில்லாமல்,சாலையில் பசியால் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியை தன்னுடைய காரில் ஏற்றிவந்து சிறப்பு முகாமில் சேர்த்து உதவி செய்த மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் இந்தியாவே வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்களும்,ஆதரவற்றோரும் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்க மாநில அரசும், சமூக நல அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073