திருப்பூர் ஆயுதப்படை காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்துகளை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் வழங்கினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 80 பேர் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய மாத்திரைகளை தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை முன்னாள் ஆலோசகர் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர்.கிங் வழிகாட்டுதல்படி கொரோணா நோய்எதிர்ப்பு சக்தி வழங்க கூடிய ஆர்சனிகம் ஆல்பம் 30 மாத்திரை வழங்கும் நிகழ்வு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் கலந்துகொண்டு ஆயுதபடை காவலர்களுக்கும் மற்ற பெண்காவலர்களுக்கும் மாத்திரைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவத்துறை முன்னாள் ஆலோசகர் டாக்டர் . கிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், துணை ஆணையர் பத்ரிநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர் . கிங் கூறுகையில், இந்த கொடியவகை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நோயை தடுக்கும், குணப்படுத்தும் மருந்துகள் ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது தெலுங்கானா, மணிப்பூர் மாநில அரசுகள் இந்த மருந்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த ஓமியோபதி மருந்தை பயன்படுத்தினால் மக்கள் நோய் வரும் முன் காக்கலாம், பக்கவிளைவுகள் இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி தர கூடியது, பிறந்த குழந்தைக்கு கூட தாய்பால் மூலம் இந்த மருந்தை கொடுக்கலாம், ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள இந்த மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது என்றும், மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஆர்சனிகம் ஆல்பம் 30 என்கிற மாத்திரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
கொடிய நோயான கொரோணா வைரஸ் நோயை தடுக்க முடியும் என தெரிவித்தார்