கடலூர் பெரு நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் புதிய விசைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் பார்வையிட்டார்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது தொழில்துறை அமைச்சர் சம்பத் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய கிருமிநாசினி தெளிப்பான் ராணிப்பேட்டை பெல் கம்பெனி மூலம் 2 கிருமி நாசினி தெளிப்பான்கள் தலா ரூபாய் 3.54 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு இன்று கடலூர் நகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் பார்வையிட்டார் நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் கடலூர் பெரு நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்