கொரானா குறித்து கல்லூரி மாணவர்கள் திண்ணைப் பிரச்சாரம் .
தேவகோட்டை , ஏப்.26- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் சமூக சேவைகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது விடுமுறைக் காலமாக இருந்தாலும் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே திண்ணைப் பிரசாரம் மூலம் கொரோனா குதித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர் இராமசாமி தமிழ்க் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் பேராசிரியருமான ஜெயமணியின் வழிகாட்டுதழின் படி மாணவர்கள் தத்தம் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் சமூக இடைவெளியின் அவசியம் குறித்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் ஊரடங்கினை பின்பற்றுதல் சுகாதாரமான வாழ்வியல் குறித்து அவர்களின் வீடு களுக்கேச் சென்று திண்ணைப்பிரச்சாரம் செய்து வருகின்றனர் இம் மாணவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்