புதுச்சேரி
காமராஜர் நகர் சாமி பிள்ளை தோட்டம் கருவடிக்குப்பம் பகுதிகளில் வசிக்கும் ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்
கொரானா ஒழிப்பு தொடர் மக்கள் ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிப் போய் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ள ஏழை தொழிலாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர் , மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு
"வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் க.வெற்றிச்செல்வம் தலைமையில், தொடர்ந்து இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தினமும் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் சேவைத் திட்டத்தின் தொடர்ச்சியாக காமராஜ் நகர் சாமிப்பிள்ளை தோட்டம் கருவடிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு
வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் க. வெற்றி செல்வம் தலைமையில் அரிசி வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் வெற்றி மக்கள் இயக்க நிர்வாகிகள் கணபதி , காதிமுருகன் , தமிழ்ச்செல்வி, லட்சுமி , மோகன் ராஜாராம் , அசோக்குமார் , தினேஷ் , மணி , துரைராஜ் சுந்தரம், சுதாகர் கார்த்தி, புதுச்சேரி ஸ்ரீ குரு சித்தானந்த கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் காமராஜ் நகர் ஒருங்கிணைந்த ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் சிவாஜி சிலை ஈசிஆர் சந்திப்பில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் வெற்றிவேல் தலைவர் வெங்கடேசப்பெருமாள் செயலாளர் பிரகாஷ் பொருளாளர் ராஜ்குமார் நிர்வாகிகள் மற்றும் வெற்றி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்