*தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கம் திருவள்ளூர் மாவட்ட கௌரவத் தலைவர் V.காமராஜ் சார்பில் பழங்குடியினர் 300 பேருக்கு அன்னதானம்*
*கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பல இடங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் தினமும் உணவுக்கு கஷ்டப்படும் நிலையிலும் மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் இதனை சரி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசியல் கட்சியினர் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்*
*அந்த வகையில் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கம் சார்பில் இதுவரை சுமார் 250 கிலோ அரிசி மற்றும் 100 குடும்பங்களுக்கு காய்கறி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது*
*அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கௌரவத் தலைவர் V.காமராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழங்குடியினர் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பிஜி முகுந்தன் முன்னிலை வகித்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் பலரும் தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்*
*மேலும் எங்களுக்காக நீங்களே நேரடியாக வந்து உணவை சமைத்து எங்கள் பசியை போக்கி அதற்காக நன்றி என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு சிறு பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் கௌரவத் தலைவர் காமராஜ் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்*