திருவாரூர் மாவட்ட மக்கள் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியர் .த.ஆனந்த், கேட்டுக்கொண்டுள்ளார்
திருவாரூர் ஏப்ரல்-25
திருவாரூர்மாவட்டத்தில்ரோனாவைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே சென்று வருவதை சீர்ப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூன்று வண்ணங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக
அனுமதிஅட்டை வழங்கப்பட்டு காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி பச்சை நிறம் அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்,
நீலநிறம் அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளிலும், பழுப்புநிறம் அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிகிழமைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவெளியில் வர அனுமதிப்படுவர். இந்த அனுமதிசீட்டு வைத்திருப்பவர்கள் அட்டையில் குறிப்பிட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் மட்டுமே வீட்டைவிட்டு வெளியேவர அனுமதிப்படுவர் என அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது
திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அனுமதி அட்டைக்கும் அனுமதி கிடையாது, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக திருவாரூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும்.
இதில் அவசர மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேற்காணும் விதிகளில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூர் மாவட்ட மக்கள் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியர் .த.ஆனந்த், கேட்டுக்கொண்டுள்ளார