போதை   மாத்திரைகள் விற்பனை அமோகம்தேனி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார்  அதிரடி சோதனை

 போதை   மாத்திரைகள் விற்பனை அமோகம்தேனி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார்  அதிரடி சோதனை


 கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுவான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
 இதன் எதிரொலியாக குடி மன்னர்கள் மதுபானங்களை வாங்கி குடிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதன் எதிரொலியாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் டாஸ்மார்க் கடைகள் உடைக்கப்பட்டு மது பாட்டில்களை மது பிரியர்களால் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்று வருகிறது.
 
தேனி மாவட்டத்தை பொறுத்த வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டாலும் வெளிமாநில மது பாட்டில்கள் வரத்து அதிகமாகவே உள்ளது. மேலும் வெளிமாநில மது பாட்டில்கள் குவாட்டர் சுமார் ரூ 800 வரையிலும்  விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான விலை உயர்வை தாங்கிக்கொள்ள முடியாத குடி மன்னர்கள் பழைய பழக்கமான கள்ளச் சாராயம் குடிப்பது என முடிவு செய்து அதனை தேட ஆரம்பித்தனர்.  மதுபாட்டில்கள் தவிர வேறு ஏதேனும் போதை தரும் வழிகள் உள்ளதா என்பது குறித்தும் தேட ஆரம்பித்தனர். கடந்த 1990 காலகட்டங்களில் தேனி மாவட்டத்தில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்பட்டது. எனவே தற்போது உள்ள குடி மன்னர்களின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மலை அடிவாரத்தில்  கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கினார்கள். இந்த கள்ளச்சாராயம் குவாட்டர் ரூ 200-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்விக்கு  ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஆகியோரை அதிரடி சோதனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்கவும், இனிவரும் காலங்களில் யாரும் கள்ளச்சாராயம் காய்ச்சாதவாறு தடுக்குமாறு உத்தரவிட்டார்.


இதன்படி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தேனி மாவட்டத்தில் உள்ள 15 காவல்நிலையங்களில் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சி யதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.18,730 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 292 பேரல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்க படுவதன் காரணமாக மது பிரியர்கள் போதை மாத்திரைகள் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் போதை மாத்திரைகள், இருமல், சளி டானிக்குகளை வாங்கி குடித்து அதன்மூலம் போதையை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  பணத்திற்காக மட்டும் ஆசைப்படும் சில மருந்து கடைக்காரர்கள் இது போன்ற போதை ஆசாமிகளை குறிவைத்து அவர்களுக்கு தேவையான போதை மாத்திரைகள் மற்றும் டாணிக்குககைகளை வாரி வழங்கி வருகின்றனர்.


 தேனி மாவட்டத்தில்  போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் விற்பனை அமோகமாக உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற செயல்படும் மருந்து கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கைது செய்து அந்தக் கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தேனி மாவட்ட செய்திகளுக்காக  க.சின்னதாஸ்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image