அதிமுக சார்பில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால்வறுமையில் சிரமப்பட்டு வரும் பொதுமக்களுக்கு கட்சி தொண்டர்கள் உறுதுணையாக இருந்து அத்தியவசிய பொருட்கள் வழங்க வேண்டுமென்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தலின்படி
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் ஊராட்சியில் அதிமுக முன்னாள் மாநில இலக்கிய அணி செயலாளர் நத்தம் கோபு மற்றும் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நவீன்குமார் தலைமையில் அப்பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் 25 கிலோ அளவில் உள்ள அரிசி மூட்டை காய்கறி மளிகை பொருட்கள் ஆகியவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது
மேலும் வருகின்ற நாட்களிலும் தொழில்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று நத்தம் ஊராட்சிமன்றத் தலைவர் கூறினார்
உடன் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர் ஊராட்சி செயலாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்