காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கொரோனாவைரஸ் நிவாரணம் மளிகைப் பொருள்வழங்கள்.
தேவகோட்டை , ஏப்.12- கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து 144 தடை அமலில் இருப்பதால் பொதுமக்கள் அத்தியா வசியப் பொருட்கள் கூடவாங்க முடியாமல்இருப்பதால்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். இராமசாமி தனது சொந்த செலவில் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை முதற்கட்டமாக இன்று தேவகோட்டை , காரைக்குடியில் வழங்கப்பட்டது. தேவகோட்டையில் சனிக்கிழமை காலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீனி, டீ தூள், மஞ்சள்தூள்,சீரகம், பெரு சீரகம், ரவா மாவு, கோதுமை மாவு,சோப்பு, தேங்கா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் துவக்கி வைத்தார் இத்தகைய மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு பகுதியாக தினமும் வழங்கப்படும்