தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை சிட்டி லயன்ஸ் சங்கம்,தேவகோட்டை ரோட்டரி சங்கம் , தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முறையாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தேவகோட்டை நகர் தடுப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. கூட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வீடுகள் தோறும் காய்கறிகள் கொண்டு வழங்கலாம் என்றும் ஏழை எளிய மக்களுக்கு முககவசம் மற்றும் கையுறைகள் இலவசமாக வழங்குதல் , சாலையோர வாசிகளுக்கு மளிகை பொருட்களையும் அத்யாவசிய பொருட்கள் போன்ற பல்வேறு சேவைகள் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் அன்றாட உணவு பொருட்கள் , முககவசம் , கையுறைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தனர். தன்னார்வலர்கள் பலரையும் இனைத்து அவசர கால சேவைகள் செய்வதாக முடிவுகள் எடுக்கப்பட்டது.