நெல்லிக்குப்பம் இஐடி பாரி ஆலை கரும்பு வெட்ட நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கை
நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை பகுதியிலுள்ள கரும்புகள் 2 லட்சம் டன் வரை வெட்டப்படாமல் உள்ளது இதனால் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது எனவே கரும்புகளை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கிறது இன்னும் பத்து நாள்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் 10,000 டன் கரும்பை வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்
குறிஞ்சிப்பாடி ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது திட்டமிட்ட அடிப்படையில் அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே துவங்கி செயல்பட்டுவந்த நெல்கொள்முதல் நிலையங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்