தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரனோ நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரனோ நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த நகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார். இந்த ஆய்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, கம்பன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் குணசேகரன், நகர்நல அலுவலர் டாக்டர் ராகவன், முன்னாள் எம்.பி பார்த்திபன், முன்னாள் எம்எல்ஏ பொண்ணு பிள்ளை, மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்