அதிமுக மாவட்ட துணை செயலாளர் அமுதாஅருணாச்சலம் தலைமையில் முகக் கவசங்கள், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வதற்கு சோப்புகள் போன்ற உபகரணங்களை காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் வழங்கினார்
செங்கம், ஏப்ரல் 12: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் காவல் துறையினருக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு நலன் கருதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணையின்படி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் அமுதாஅருணாச்சலம் தலைமையில் முகக் கவசங்கள், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வதற்கு சோப்புகள் போன்ற உபகரணங்களை காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களிடம் வழங்கினார். மேலும் இதனைத் தொடர்ந்து தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார், இவருடன் தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் சங்கர், குமார், மகரிஷி மனோகரன் என கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073