செங்கம் அருகே கொரோனா வைரஸ் தொற்று நோய் மருத்துவர்களுக்கும் பரவுதல் அச்சமின்றி பொதுமக்களின் நலன் கருதி மருத்துவ பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களை அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சொந்த செலவில் நினைவுப் பரிசுகளை வழங்கி தொடர்ந்து பாராட்டி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காரப்பட்டு வட்டார மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரியும் வட்டார மருத்துவர், உதவி மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 24 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் சால்வை, கேடயம் மற்றும் நினைவு பரிசுகளை வட்டார மருத்துவ மனைகள் தோறும் நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்ந்து வழங்கி பாராட்டி வருகிறார்.
மேலும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவருக்கும் தனது சொந்த செலவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக மருத்துவர்களின் நலன் கருதி பைபர் உடைகள் ஓரிரு தினங்களில் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் அவர் பேசுகையில் தொகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனைக்கு தேவைப்படும் தடுப்பு உபகரணங்கள் எந்த நேரத்திலும் தனது சொந்த செலவில் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக வட்டார மருத்துவர் சுபத்ரா அவர்களிடம் தெரிவித்து பேசினார். இதில் கழக நிர்வாகிகள் பொய்யாமொழி, ஒன்றிய கவுன்சிலர்கள் தவமணி, ரமேஷ் என பலர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073