மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிவாரன உதவிகள் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அறிவுரையின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்க கூறினார். இதனையடுத்து கடலூர் வடக்கு மாவட்ட கங்கிரஸ் சார்பில் பண்ருட்டியில் ஏழை எளிய பொது மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிவாரன உதவிகள் வழங்கினார். இதில் மாநில பொதுகுழு உறுப்பினர்கள் வேலுமணி, ஷபியுல்லா, மாவட்ட பொதுகுழு உறுப்பினர் சாகுல் அமீது, வட்டார தலைவர்கள் ராமசந்திரன், பிரேமாகேசவன் குணசேகர், தருமசிவம் நகர தலைவர் முருகன், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து வள்ளி, கருணாநிதி, கணேசன் சங்கரலிங்கம், அப்பர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்'