திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே மருத்துவ களப்பணியாளர்களுக்கு அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சொந்த நிதியில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகள், முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினிளை வழங்கினார்.
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி வட்டார மருத்துவமனை மற்றும் வீரலூர், ஆதமங்கலம்புதூர், பாடகம், வில்வாரணி ஆகிய கிராமம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஆதமங்கலம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்க வந்து சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் முகக் கவசங்கள் அணியாத இளைஞர்களுக்கும், உள் நோயாளிகளுக்கும், மருத்துவ பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு முக கவசங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து இலவச மளிகை தொகுப்புகள், முகக் கவசங்கள், கிருமிநாசினி போன்றவைகளை பணியாளர்களின் நலன் கருதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் வழங்கினார்.
மேலும் இதில் கழக நிர்வாகிகள் பொய்யாமொழி, ரமேஷ், , ஏழுமலை என பலர் கலந்து கொண்டனர்கள். இவர்களுடன் கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, உதவி மருத்துவர்கள் திருமுருகன், விக்னேஷ், மருத்துவ மேற்பார்வையாளர், மருத்துவ ஆய்வாளர், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருடன் பன்னீர்செல்வம் எம்எல்ஏ பொதுமக்களுக்கு எவ்வித பாரபட்சமும் பாராமல் செயல்படவும், அவப்போது குடியிருப்பு பகுதிகளிலும், சாலை மற்றும் வீதிகள் தோறும் கிருமிநாசினி முறையாக தெளிப்பான் மூலம் தெளிக்கும்படி அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073