மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க மகத்தான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழிதேவன் அவர்களின் ஆலோசனையின் பெயரிலும் திட்டக்குடி நகர அதிமுக சார்பில் 18 வார்டுகளின் நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்ட 3500 ஏழை எளிய குடும்பத்தினர்களுக்கு 9 லட்ச ரூபாய் மதிப்புடைய அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியை மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார் இதில் விருதாச்சலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் திட்டக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் நகர அதிமுக செயலாளருமான அரங்க நீதிமன்னன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்