கொரோனா தடுப்பு நடவடிக்கை ; மத்திய ,மாநில அரசின் செல்பாடுகள் பாராட்டுக்குரியது. மூ.மு.க.,தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை ; மத்திய ,மாநில அரசின் செல்பாடுகள் பாராட்டுக்குரியது.
மூ.மு.க.,தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் .


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய ,மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது
என மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தையே
தலைகீழாக புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் உலக மக்களிடையே உயிர் பயத்தை ஏற்படுத்தி வருகிறது. 130 கோடி மக்கள் வாழும் நமது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி பல நாடுகளும் வரவேற்றுள்ளது. தமிழக அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமான நடைமுறைகளை கையாண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின்
செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியதாகும். தமிழகம் முழுவதும் ஏப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
அர்ப்பணிப்புத்தன்மையுடன் சேவையாற்றி வரும் தமிழக வருவாய் துறையினர், டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள்,
மின்வாரியத்துறையினர் மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும்
எங்களது கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். கஜா புயல், வர்தா புயல் போன்ற பல இயற்கை சீற்றங்களின்போது மின்சாரம் மற்றும் குடிநீர்
வசதி இல்லததால் மக்கள் பெரும் துயரமடைந்தனர். தற்போது, மின்சாரம்,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைத்து வருவது ஆறுதலான
செய்தியாகும். ஊரடங்கு உத்தரவு திரும்பப்பெறும் வரை, ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும்
ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 2 மாத கால அவகாசம் மற்றும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் துப்புறவு தொழிலாளர்கள் முதல் உயரதிகாரிகள் வரையிலான அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் சாதனங்கள் மட்டுமின்றி உயர்தரத்தினாலான முகக்கவசங்கள் போன்ற வைரஸ்
தடுப்புக்கான கவசங்களும் போதுமான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விவசாயிகளின் விளை பொருட்கள் வீணாகாமல் தடுத்து அவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இன்று பிறக்கும் நமது தமிழ் புத்தாண்டை அவரவர்களது வீட்டிலிருந்தே மக்கள் கொண்டாட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழித்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுமையான ஆதரவை வழங்கிட வேண்டுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image