இரண்டாவது நாளாக பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் ஜவ்வாது மலையில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் இரண்டாவது நாளாக இன்று காலை பெய்த கனமழையால் மலை கிராமங்களில் உள்ள குட்டக்கரை, கானமலை ஆகிய கிராமங்களில் செல்லும் தானியாறு, பாதிரியாறு மற்றும் மஞ்சூத்யாறு ஆகிய சிற்றூர்களில் திடீரென காட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த சிற்றாறுகளில் செல்லும் வெள்ளப்பெருக்கு போளூர் அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணைக்கு சென்று பாய்கிறது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு அணைக்கு வந்ததால் அணை அருகே உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் சித்திரை மாதத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு புதிய மழைநீர் வந்தடைந்தாள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073