இஸ்லாமியர்கள் மீதான  அவதூறு செய்திகளை   பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

இஸ்லாமியர்கள் மீதான  அவதூறு செய்திகளை   பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.*


*டெல்லியில் மார்ச் 13 ஆம் தேதி தப்லீக் ஜமாத்தின்  இக்கூட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் தமிழகத்திலிருந்தும் பலரும் கலந்து கொண்டனர் . கூட்டம்  முடிந்த பிறகு தமிழகத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் திரும்பி வந்துள்ளார்கள். டெல்லி கூட்டத்திற்கு சென்று திரும்பி வந்த தப்லீக் ஜமாத்தினர்கள் கொரோணா வைரஸை தமிழகத்தில் பரப்புகிறார்கள் என அவதூறு செய்திகளை சமூக விரோதிகள் பரப்பி வருவது கண்டிக்கதக்கது.*


*தமிழகத்தில் சாதி, மத பாகுபாடின்றி மக்கள் அனைவரும் சமூக  நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில்  இஸ்லாமியர்கள் மீது தவறான செய்திகளை  பரப்பி  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல் பட்டு வரும் சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது  .* 


*கொரோனா வைரஸ் மதம் பார்த்து தொற்றிக் கொள்ளும் நோய்க்கிருமியல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள யாரையும் எளிதில் தொற்றிக் கொள்ளும்  என்பதை கூட தெரியாமல் கொரோணா வைரஸை பரப்புவர்கள் இஸ்லலாமியர்கள் தான் என்று சமூக விரோதிகள் திட்டமிட்டு சமூக வளைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள் . என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்  .*


*டெல்லியில் மார்ச் 13 ஆம் தேதி தப்லீக் ஜமாத் கூட்டம்  நடை பெற்ற  போது கொரோணா வைரஸ் சம்பந்தமாக நாட்டில் எவ்வித கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்படாத சாதாரண சூழலில் டெல்லி சென்று வந்த முஸ்லிம்களில் சிலருக்கு நோய் தொற்று உள்ளதாக தெரிய வருகிறது .மேலும் டெல்லி சென்று திரும்பி வந்த நபர்களை கண்டறிந்து கொரோணா வைரஸ் சம்பந்தமாக தமிழக அரசு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது .*


  *டெல்லி சென்று தமிழகத்திற்கு திரும்பி வந்த தப்லீக் ஜமாத்தினர்கள் தானாக முன் வந்து கொரோணா வைரஸ் சம்பந்தமாக மருத்துவ பரிசோதணைக்கு உட்பட்டு  ஓத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் இந்த நிலையில்  இஸ்லாமியர்கள் மீது வின் பழி சுமத்தி சமூக நல்லிணக்கத்தை சிர்குலைக்கும் வகையில் சமூக வளைதலங்களில் வேண்டும் என்றே திட்ட மிட்டு வதந்திகளை பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் மென  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.*


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image