நட்சத்திர டிரஸ்ட் சார்பாக திருப்பரங்குன்றம் பகுதி ஏழை எளியோருக்கு அன்னதானம்
மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியில் உலகம் முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் சர்ச் அஃப் சாலை தேவாலயத்தின் சார்பில் பாஸ்டர் வேதமணி தலைமையில் ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து (மார்ச் 24) இன்று வரை தினந்தோறும் எங்கள் சர்ச்க்கு கீழே இயங்குகின்ற நட்சத்திர டிரஸ்ட் சார்பாக மாஸ்க் தினந்தோறும் 200 முதல் 300 பேருக்கு நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம் அதனுடன் சாப்பாடு கிடைக்காத இந்த சூழ்நிலையில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் சமையல் ஆட்கள் வைத்து சமைத்து பார்சல் செய்து 200 முதல் 300 பொட்டலங்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று கொடுக்கின்றோம் இதனுடன் அரசு காப்பகத்திற்க்கு அரசு அதிகாரிகளின் உத்தரவுடன் கொடுத்து உதவி செய்கிறோம் அது மட்டும் அல்லாது ஊரடங்கு முடியும் வரை சுகாதாரத்துறை முறைப்படி இந்த உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் இந்த காரியத்திற்கு எங்களுக்கு ஆதரவாக ஊர் மக்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் உதவி செய்கின்றனர் சமூக இடைவெளி விட்டு மிகவும் கவனமாக இந்த சேவையை செய்து கொண்டு வருகிறோம்